Monday 7 November 2016

திரௌபதி அம்மன் வழிபாடு

தமிழகத்தின் க்ஷத்ரியர்களான பெரும்பான்மை வன்னிய மக்களால் வணங்கப்படும் பெண்கடவுள் திரௌபதை தேவி ஆவாள் 


வன்னியர்கள் ஷம்பு  மஹரிஷியின் வேள்வியில் தோன்றிய அக்னிகுல க்ஷத்ரியர்களாவார்கள் அக்னியே ஏனைய குலங்களான சூரிய , சந்திர , யது வம்சத்திற்கு  மூலமாகும். வன்னியர்கள் தங்களின் முன்னோர்களாக பாண்டவர்களை கருதுகின்றனர் . கர்நாடக பகுதியில் வசிக்கும் சில வன்னியர்கள் பாண்டவ குலம் என்ற பெயரினைக்கொண்டு தர்மராஜா(தர்மன் ) வழிபாட்டினை காலம் காலமாக செய்து வருகின்றனர் இப்பழக்கம் தமிழகத்தில் உள்ள வன்னியர்களிடமும் உள்ளது .. எனவே துருபதனின் யாகாக்கினியில் உதித்த திரௌபதியை வன்னியர்கள் குலக்கடவுளாகக் கொண்டுள்ளனர்.
Draupadi matha From Yagna



தமிழகத்தில் காணப்படும் பெரும்பான்மையான திரௌபதி ஆலயங்கள் அனைத்தும் வன்னியர்களுக்கு பாத்தியப்பட்டவையாகவே உள்ளது .

எங்கெல்லாம் திரௌபதி ஆலயங்கள் உள்ளதோ அங்கெல்லாம் வன்னியர்கள் பரவலாக காணப்படுகின்றனர் . வன்னிய குல க்ஷத்ரியர்களால் பல திரௌபதி ஆலயங்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது . இடத்திற்கு ஏற்ப திரௌபதி ஆலயங்களில் உள்ள சிறுதெய்வங்கள் மாறுபடுகின்றன .இதற்கு காரணம் திரௌபதி அம்மன் வன்னியகுல க்ஷத்ரியர்கள் பொதுவான குலக்கடவுளாக இருந்தாலும் ஒவ்வொரு தனிப்பட்ட வன்னியர் குடும்பங்களுக்கும் தனித்தனி குலதெய்வங்கள் உண்டு இவையே அந்தந்த பகுதியை சேர்ந்த திரௌபதி அம்மன் ஆலயங்களில் காணப்படுகின்றது .

மேலும் ஒருபதிவில் விரிவாக திரௌபதி அம்மன் வழிபாட்டையும் அதில் வன்னியர்களின் பங்களிப்பையும் பற்றிக்காண்போம் .........

No comments:

Post a Comment