Thursday 14 April 2016

                              

                              சோழர் வம்சாவளியினர் 



தென்கிழக்கு ஆசியாவையே கட்டியாண்ட சோழ 

மன்னர்களின் வாரிசுகள் வீர வன்னிய குல 

க்ஷத்ரியர்கள் 



இன்று கல்வெட்டுகளில் வரும் சில பட்டங்களை வைத்துக்கொண்டு சில ஜாதியினர் தங்கள் சோழ மன்னர்களின் பரம்பரை எனவும் , வம்சம் எனவும் கூறிக்கொள்கின்றனர். ஆனால் வரலாற்று ஆய்வாளர்களும் , தொல்லியல் துறை அறிஞர்களும் சிதம்பரத்தை அடுத்த பிச்சவரத்தை சேர்ந்த சோழ மன்னர்களே சோழர்களின் உண்மையான வாரிசுகள் என உறுதியாக கூறுகின்றனர்.

எந்த சாதியினர் எத்தனைப் பட்டங்கள் வைத்துக்கொண்டாலும் சோழர்களின் வம்சத்தினர் வன்னியர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கல்வெட்டு ஆதாரங்களும், பட்டயங்களும் வன்னியர்களுக்கு ஆதரவாகவே உள்ளன .

பிச்சாவரம் சோழர்கள் 


வீரவர்ம சோழன், விட்டலேஸ்வர சோழ கோனார், தீவுக் கோட்டை சோழகன் போன்ற சோழ மன்னர்களை "பிச்சாவரம் அரசர்கள்" என்று சான்றுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. இவர்கள் பொதுவாக "தீவுக் கோட்டை சோழர்கள்" (தேவிக் கோட்டை சோழர்கள்) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்கள்.
தீவுக்கோட்டை சோழர்கள், செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கருக்கு உற்ற தோழனாக விளங்கினார்கள். தீவுக்கோட்டை சோழர்களை ஒடுக்குவதற்கே, ரகுநாத நாயக்கர் அவர்கள் கர்நாடக பேரரசால் தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். தஞ்சைக்கு ரகுநாத நாயக்கன் வந்த காரணமே "தீவுக்கோட்டை சோழர்களை" ஒழிப்பதற்கே ஆகும். ரகுநாத நாயக்கன் தீவுக்கோட்டை சோழகனை போரில் வென்றான். அதன்பிறகு தஞ்சையை கைப்பற்றி ஆண்டுவந்தான். இதைப்பற்றி "சாஹித்ய ரத்னாகரம்" என்ற நூல் குறிப்பிடுகிறது. ரகுநாத நாயக்கருக்கு முன்னர் தஞ்சையை "சோழர்களே" ஆண்டுவந்தார்கள் என்பது அசைக்கமுடியாத வரலாறாகும்.
பீசப்பூர் என்னும் விசைப்புரச் சுலுத்தானின் படைகள் கி.பி. 1659 ஆம் ஆண்டு வல்லதின்மேற் சென்றபோது, விசயராகவ நாயக்கரும் அவர் படைஞரும் கோட்டையை விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டனர். அன்று வல்லத்தைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள் கவர்ந்த கள்வர், சுலுத்தான் படைகள் திரும்பியபின், தாம் கவர்ந்ததில் ஒரு பகுதியை விசயராகவ நாயக்கருக்கு மிளக் கொடுத்து விட்டனர். (மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்).
தீவுக் கோட்டை என்பது பிச்சாவரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி முடிவுற்றதும், சோழ மன்னர்கள் தங்களது கோட்டையான "தேவிக் கோட்டைக்கு" பாதுகாப்பின் காரணமாக குடிப்பெயர்ந்திருக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரம் முற்றிலுமாக அழிந்த பிறகு சோழர்கள் தங்களது தலைநகரமாக "சிதம்பரத்தை" அமைத்துக் கொண்டார்கள் என்று இந்திய தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை ஒன்று "கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில்" உள்ளது. பிச்சாவரம், சிதம்பரம், தீவுக்கோட்டை என்ற மூன்றுமே "சிதம்பரத்தை சார்ந்ததாகும்".
பிச்சாவரம் சோழ அரசர்கள், பிற்காலச் சோழ அரசர்களின் வழிவந்தவர்கள் என்ற காரணத்தினால் தான், சோழர்களின் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் "திருமுடி சூட்டப்பெறுகிறது". இந்த முடிச்சூட்டு நிகழ்வைப்பற்றி, கூடல் மாநகர் (மதுரை) இருவாட்சிப் புலவரால் பாடப்பெற்ற "திருக்கைவளம்" என்ற வன்னியர் புகழ்பாடும், கி.பி. 18 ஆம் நூற்றாண்டு நூல் குறிப்பிடுகிறது.
தில்லை நடராஜர் கோயில் தீஷிதர்கள், பிச்சாவரம் சோழ அரசர்களை "சக்ரவர்த்தி" என்று குறிப்பிடுகிறார்கள். சோழர்களுக்கு மட்டுமே தில்லை வாழ் அந்தணர்கள் முடிசூட்டுவார்கள் என்பது வரலாறு. இன்று தங்களை சோழர்கள் என்று எவ்வித சான்றுகளும் இல்லாமல் பொய்சொல்பவர்கள், தில்லை கோயிலில் அக் காலத்தில் வெளியிலிருந்து முடிசூட்டு விழாவை வேடிக்கை பார்த்தவர்களின் வம்சத்தவர்கள் ஆவர்.

நன்றி: திரு முரளி நாயக்கர் 


நன்றி: திரு. ஆறு. அண்ணல் கண்டர்


ஊடகங்கள்  சோழ   மன்னர்களின் வாரிசுகளை 

பேட்டி எடுத்த காணொளிகள்









பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு


பிச்சாவரம் சோழர்களின் கல்வெட்டு

                                                                    இங்கு click செய்யவும்
                                               



                          ஆசியாவையே அரசாண்ட மன்னரினம் க்ஷத்ரியர்களாகவே 
                            இறுக்க முடியும் தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னிய 
                                             குலத்தினர் மட்டுமே க்ஷத்ரியர்கலாவர் 



                                         சோழ வம்சம் பற்றிய மேலும் விவரங்களுக்கு 
                                                           இங்கே click செய்யவும்




1 comment:

  1. சோழ மன்னர் பிச்சாவரம் ஜமின் பாளையக்காரர் சின்னவகுப்பு அரண்மனை ஸ்ரீ ராமசாமி சூரப்ப சோழகனார் அவர்களுது திருகல்யாண திருமுகம் (பத்திரிக்கை) எங்கிருத்து பெற்றீர்கள்?

    ReplyDelete