Thursday 14 April 2016

சேர மன்னர்களின் வம்சாவளியினர்  வன்னியர்களே 


சேர மன்னர்களின் வாரிசுகளான 

அரியலூர் மழவராயர்கள்





டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் அரியலூர் மழவராயர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் சங்ககால மழவர்களின் மரபினர்கள் என்றும் அவர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்கள் என்றும் ஒப்பிலா அம்மனை வழிப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மழவராயர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு கி.பி. 20 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவதாகவும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்டு பற்பல சான்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று :-
"இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239 - 1251) தனது பத்தாம் ஆட்சியாண்டில், ஐயன் மழவராயன் விருப்பப்படி, திருமாலுகந்தான் கோவில் என்னும் ஊரிலுள்ள ஒப்பிலா முலையார் என்ற அம்மன் கோவிலுக்கு வரியிலியாக நிலங்களை விட்டான் என்று குறிப்பிடுகிறார்"
தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள், அரியலூர் மழவராயர்களைப் பற்றி "வன்னியர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கர்னல் மெக்கென்சி சேகரித்த குறிப்புக்களில் "அரியலூர் பாளையக்காரர் கைபீது (கி.பி. 1805)" என்ற கைபீதும் ஒன்றாகும். இக் கைபீது "மாளவராயர் அரியலூர் பாளையக்காரர் ஸம்ஸ்தானம் மதுரை, திருச்சிராப்பள்ளி வகையறா" என்று தொடங்கப்பெற்றிருக்கிறது. ஜாதியில் வன்னிய குலத்தவர்களுடைய வமிசாவளி என்று குறிப்பிடுவதாக தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்ட "ஐயன் மழவராயன்" அவர்கள் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239 - 1251) ஆட்சி காலத்தில் மதுரை அழகர் கோயிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் கொடைகள் வழங்கியுள்ளதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரியலூர் பாளையக்காரர்களின் சமஸ்தானம் "மதுரை திருச்சிராப்பள்ளி வகையறா" என்று கைபீது தெளிவாக குறிப்பிடுவதால், வன்னிய குல க்ஷத்ரியர்களான மழவராயர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. மேலும் கைபீது "பள்ளிக் கொண்ட ஒப்பிலா மழவராயர்" என்ற அரியலூர் அரசரை குறிப்பிட்டு அவருடைய ஆட்சியாண்டையும் (கி.பி. 1422 - 1457) குறிப்பிடுகிறது.
கி.பி. 1450 ஆம் ஆண்டில் "பள்ளி கொண்ட பெருமாள் மழவராயர்" என்ற அரசர் பட்டுக்கோட்டைப் பகுதிக்குத் தலைவனாயிருந்தான் என்று திருச்சிற்றேமம் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கி.பி. 1582 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை செப்பேட்டில் வன்னியர்களான அரியலூர் மழவராயர், பருவூர் கச்சியராயர், பிச்சாவரம் சோழகனார் மற்றும் உடையார்பாளையம் காலாட்கள் தோழ உடையார் குறிப்பிடப்படுகிறார்கள்.
எனவே வன்னிய அரசர்கள் புதுக்கோட்டை பகுதியை கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலும் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கள்ளர் குல தொண்டைமான்கள் கி.பி. 1686 ஆம் ஆண்டு முதலே (கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம்) புதுக்கோட்டைப் பகுதியை அரசாட்சி செலுத்த தொடங்கினார்கள் என்பது வரலாறாகும்.
அரியலூர் மழவராயர்கள், சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி. 1070) நன்னிலம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறார்கள் என்று நான் இன்றைய ஆய்வில் கண்டறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அக் கல்வெட்டு :-
"விளை நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கன்னரதேவன் மருதமாணிக்க தேவன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை அரியலூருடையான் மழவதரையன் நில......."
மேலும் ஒரு நன்னிலம் கல்வெட்டு "பரமேச்சுவர மங்கலத்து அரியலூருடையான்" என்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ வல்லபப் பண்டியனுடையதாகும்.
பாண்டியர்களுடைய பல கல்வெட்டுகளில் "பள்ளிப் பீட மழவராயன்" என்றும் "பள்ளிக் கட்டில் மழவராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இப் பெயர்கள் என்பது பாண்டிய அரசர்கள் தாங்கள் பயன்படுத்திய "பள்ளிக் கட்டிலாகும்". அதாவது "பாண்டிய அரசர்களது சிம்மாசனமாகும்". அத்தகைய பெருமைமிகு சிம்மாசனத்திற்கு வன்னியர்களான மழவராயர்களது பெயரினை பாண்டியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இதன் மூலம் "பள்ளி" என்னும் சொல் "வேந்தனை" குறிப்பிடும் சொல்லாக அறியமுடிகிறது.
அரியலூர் மழவராயர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணக்கிடைகின்றன. அவர்கள் பல கோயில்களை எழுப்பியும் கொடைகளை வழங்கியும் வரலாற்றில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அரியலூரில் கோதண்டராமஸ்வாமி கோயிலில் மழவராயர்கள் கட்டிய "தசவதார மண்டபம்" என்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.





நன்றி: திரு.N.முரளி நாயக்கர் 





                                மேலும் விவரங்களுக்கு இங்கு click செய்யவும் 











No comments:

Post a Comment